தொளசம்பட்டி ஏப்,19.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 7.00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அந்த பகுதி மக்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்கு பதிவு செய்தார்கள். தொளசம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 6856 வாக்குகள் உள்ளது இதில் 5848 வாக்குகள் பதிவாகியுள்ளது அதாவது 85% வாக்குகள் தொளசம்பட்டி வாக்குச்சாவடியில் பதிவாகியுள்ளது வாக்குச்சாவடி மைய எண் 211 முதல் 218 வரை இருந்தது.
அதிமுக வேட்பாளர் வாக்குப்பதிவை பார்வையிட்டார்
தொளசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் வாக்கு பதிவை பார்வையிட்டார் உடன் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments:
Post a Comment