சேலம் மாவட்ட கேரம் கழகம் மற்றும் சேலம் ஒய் எம் சி ஏ இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 29/04/ 2024 துவங்கப்பட்டது. இந்த போட்டியானது ஒற்றையர் மட்டும் இரட்டையர் பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியை அகில இந்திய கேரம் சம்மேளனத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு கேரம் கழகத்தின் தலைவரும், சேலம் மாவட்டம் சேலம் கழகத்தின் தலைவருமான எம். நாசர் கான் என்கின்ற அமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியின் துவக்க விழாவினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் இரா. இராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார்.பின்பு மாணவர்களுக்கு கேரம் போட்டியினை பற்றி சிறப்புரையாற்றினார்.
மேலும் சேலம் மாவட்ட கேரம் கழகத்தின் தலைவர் எம். நாகர்கோன் என்கின்ற அமான் கூறுகையில் கேரம் போட்டியின் மகத்துவத்தையும் அதன் சிறப்பையும் எடுத்துரைத்தார். பின்பு ஸ்ரீநிதி என்ற மாணவி தங்கப் பதக்கம் வென்றதை மேடையில் வரவழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்
போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட கேரம் கழக தலைவர் எம். நாசர் கான் என்கின்ற அமான், செயல் தலைவர் லாரன்ஸ், புரவலர் ராபர்ட் கிறிஸ்டோபர், துணைத் தலைவர்கள் ஜோஸ், மகாதேவன், மாவட்ட செயலாளர் அன்பன் டேனியல் மாவட்ட பொருளாளர் அல்லி முத்து, சம்பத்குமார், செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார் , யோகநாதன், உலகநாதன், மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment