சேலம் மாவட்டத்தில் இந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 April 2024

சேலம் மாவட்டத்தில் இந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை




 சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இஆப., அவர்கள் தகவல்.

சேலம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, 6 சட்டமன்ற பகுதிகளின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில்,பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, 20.04.2024 முதல் வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்ளிட்ட காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பகுதிகளில் 05.06.2024 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை UAS/UAV (Drones)க்கான தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் எந்தவித விதிமீறலும் தீவிரமாக கருதப்பட்டு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இராயிருந்தாதேவி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 


தமிழக குரல் மேற்கு மண்டல செய்தி பிரிவு.....

No comments:

Post a Comment

Post Top Ad