திமுக சார்பாக தாரமங்கலத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு; மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகரக் கழகம் சார்பில் தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நீர்மோற்பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாரமங்கலம் நகர மன்ற தலைவர் குப்பு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு, தர்பூசணி, இளநீர்,வெள்ளரிக்காய் மற்றும் நீர்மோர் வழங்கினார்.இதில் கவுன்சிலர் அமுதா, சம்பு,ரகுபதி, கார்த்தி. திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment