சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிபட்டி மாரியம்மன் திருவிழா வருடம் வருடம் சித்திரை மாதம் நடைபெறும்.இந்த வருடம் நடைபெற்ற திருவிழாவில் ஒரு சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று சாமி வழிபட வேண்டும் என்று கூறி சாமி கும்பிட முயன்றுள்ளனர் இந்த நிலையில் மற்றொரு சமூகத்தினர் காலம் காலமாக என்ன நடைமுறை இருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும் என்று கூறினர் எனவே இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவட்டிப்பட்டி போலீசார் இரு தரப்பையும் அழைத்துப் பேசிய அதிகாரிகள் கோவிலை பூட்டிவிட்டு காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிச் சென்றனர். நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் தனியாக நாங்கள் முடிவெடுக்க முடியாது என்றும் எங்கள் தரப்பை சேர்ந்தவர்களும் கலந்து பேசி வெள்ளிக்கிழமை முடிவை சொல்கிறோம் என்று கூறினார்கள் இதில் முடிவு எட்டப்படாத நிலை இருந்தது.
கற்களை வீசி கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது அந்த இடமே ஒரு பெரும் கலவரம் போல் காட்சியளித்தது சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.19 பேர் கைது செய்யப்பட்டனர் காவல்துறையினர் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பேட்டி
தீவட்டிப்பட்டியில் பெரிய மாரியம்மன் கோவில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து இரு தரப்பினர் மோதிக்கொண்டனர் கல் வீசி தாக்குதல் நடத்திய இரு தரப்பைச் சேர்ந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் தற்போது நிலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன மேலும் அந்த பகுதி முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர் தொடர்ந்து யாராவது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சமூக அமைதிக்கு ஊரு விளைவித்தல் குறித்த செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment