தமிழ்நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதிவேடுகள் வழங்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலுச்சாமி அறிக்கையில் கூறியதாவது.
போசன் டிராக்கர் என்ற செயலி , தரவுகளை உள்ளீடு செய்யும் தேவையை நிச்சயம் நிவர்த்தி செய்யும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் ICDS லிருந்து அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்த பதிவேடுகளை வழங்குவது நிறுத்தப்பட்டது.என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், இதற்கு நேர்மாறாக, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு தரவுகளைபதிவுசெய்ய வசதியாக பதிவேடுகளை வழங்காமலேயே, செயலி மற்றும் பதிவேடு இரண்டிலும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நாங்கள் பல தடவைகள் வலியுறுத்தியும் ஒவ்வொரு முறை கலந்துரையாடலின் போதும் தேவையான பதிவேடுகளை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டும் இதுவரை எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
எங்களது தொழிற்சங்கம் முன்முயற்சி எடுத்து இரண்டு மாதிரி விரிவான பதிவேடுகளை அச்சடித்து, ஒன்றை ஐசிடிஎஸ்-க்கு சமர்ப்பித்தும், இன்றுவரை இப்பிரச்சினையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பதிவேடுகளை ஐ.சி.டி.எஸ் –இல் இருந்து வழங்குவதற்கு பதிலாக, பெரும்பாலான இடங்களில் அதிகாரிகள் பதிவேடுகளை அச்சடித்து, தங்கள் முகவர்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
குறைந்த ஊதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்தி இதுபோன்ற பதிவேடுகளை வாங்கும் பொருளாதாரக் கஷ்டத்தை நீங்கள்புரிந்து கொள்ளலாம். இந்த விஷயத்தில் இந்த தொழிற்சங்கம் உங்களுடன் நடத்திய விவாதத்தின் போது கூட இப்பிரச்சினை கவனிக்கப்படும் என்று உறுதியளீத்தீர்கள்! ஆனால் இவ்விஷயத்தில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது!.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதிவேடுகளை பராமரிப்பது கட்டாயம் என ஐ.சி.டி.எஸ்- லிருந்து பலமுறை சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வருகிறது அப்படி என்றால் பொருளாதாரத்தில் விளிம்பு நிலையிலுள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதிவேடு வழங்க பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதையும் வழங்காமல், இத்னை வியாபாரமாகச் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
எனவே, பதிவேடுகளை வழங்காமல் அவற்றை பராமரிக்கச் சொல்வதும் சமர்ப்பிக்குமாறு கூறுவதும் கேலிக்கூத்தாக உள்ளதால், இப்பிரச்னையை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அங்கன்வாடி மையங்களில் பதிவேடுகள் பல்லாண்டு காலம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வசதியாக , பதிவேடுகளை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment