சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள 56 அடி உயரமுள்ள ராஜமுருகன் சிலை முகம் சரியாக இல்லை என்று பக்தர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக நிர்வாகிகள் பலர் கோவிலுக்கு சென்று கோவில்
நிர்வாகிகளை சந்தித்து நீங்கள் முருகன் சிலையை மறு சீரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்வதாக இருந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் கும்பாபிஷேகம் செய்ய விட மாட்டோம் என்று இந்து முன்னணி சார்பாக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
கோவில் நிர்வாக தலைவர் வெங்கடாசலம் வேறு சிசிற்பி வைத்து மறு சீரமைப்பு செய்து கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment