சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பொலிந்த கனமழையால் பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை இதுவே பள்ளி திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்கின்ற சூழ்நிலை ஏற்பட்டால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல்,நோய் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் பள்ளியில் கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் மழை பொழிந்தால் பள்ளி வளாகமே குளம் போல் காட்சியளிக்கின்றது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது .
No comments:
Post a Comment