தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 29 May 2024

தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்



              தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுக்கும் அலுவலர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையர் சேலத்தில் தெரிவித்தார்.           அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலாக பெறப்பட்டு வருகிறது. இதில் உரிய பதில் அளிக்காமலும் பதில் அளிக்க மறுக்கும் போது தகவல் அலுவலர்கள் மீது வழக்குகள் தொடரப்படுகிறது.        


       அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 13 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் முருகன் நேற்று சேலம் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.    அப்போதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் மற்றும் பொதுமக்களுக்கான உரிமைகள் குறித்து பேசினார்.  மேலும் சரிவர தகவல் தராத அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார்.


       தொடர்ந்து தகவல் ஆணையர் முருகன் தொடர்ந்து தகவல் ஆணையர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில் "தமிழகத்தில் உள்ள 32 துறைகளில் உள்ள சந்தேகங்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு தீர்வு காண்கின்றனர்.    வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்துறை, மற்றும் கனிம வளம் ஆகிய துறைகளில் தான் அதிக அளவில் வினாக்கள் எழுப்பப்படுகிறது. திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஒப்பந்ததாரர் கால அவகாசத்திற்குள் அந்தத் திட்டத்தை மேற்கொள்கிறாரா? என்பது பற்றியும் நிதி முறைகேடு குறித்தும் மனுக்கள் அதிகளவில் வருகிறது.  இது தொடர்பாக அதிகாரிகள் 30 நாட்களுக்குள் தகவல் தர மறுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நாளைக்கும் தலா ரூபாய் 250 மீதமும் 100 நாட்களுக்கு மேல் செல்லும்போது ரூபாய் 25 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் "என்றார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  செய்தியாளர் தீனதயாளன் மற்றும்  தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad