சேலம் 5 ரோடு திருமண மண்டபத்தில் இன்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் மற்றும் தேமுசா சங்க பொதுச்செயலாளர் வேலுச்சாமி,சண்முகம் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஓய்வு பெறும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வுதியமாக 9000 வழங்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு பணியாளராக அறிவித்திட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கிட வேண்டும். அங்கன்வாடி காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது இதில் அங்கன்வாடி மேற்பார்வையாளர் மணி மற்றும் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்..
No comments:
Post a Comment