தொளசம்பட்டி சந்தைப் பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு 70 ,98 அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 3 June 2024

தொளசம்பட்டி சந்தைப் பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு 70 ,98 அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி




சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேருந்து நிலையத்தில் 98 மற்றும் 70 நம்பர் கொண்ட அரசு பேருந்து சேலத்தில் இருந்து தொளசம்பட்டிக்கு வருகின்றன இந்த பேருந்து தொளசம்பட்டி பேருந்து நிலையத்திலேயே நின்று விடுகிறது ஆனால் பொதுமக்கள் பெரும் சிரம் அடைகின்றனர்.பேருந்து நிலையத்திலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் சந்தை ப்பேட்டை என்ற பஸ் நிறுத்தம் உள்ளது.


இதில்  இந்த 98 70 நம்பர் அரசு பேருந்து இந்த சந்தப்பேட்டை பஸ் நிறுத்தத்திற்கு பஸ் வருவதில்லை இதனால் பள்ளிக்குச் செல்லும்  மாணவ மாணவிகள் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் ஊழியர்கள் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இவர்களெல்லாம் தொளசம்பட்டி சுற்றுப்புறத்தில் இருந்து பஸ் பயணம் செல்ல வருகின்றனர் இவர்களால் தொளசம்பட்டி பஸ் நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல இயலவில்லை ஆனால்  இந்த குறிப்பிட்ட நம்பர் பஸ் மேலே குறிப்பிட்டுள்ள அரசு பேருந்து தொளசம்பட்டி சந்தப்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதிக்கு இந்த அரசு பேருந்து வந்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் அரசு ஊழியர்கள் பஸ்ஸில் பயணம் செய்து தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்கள் செல்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.


ஆனால் இந்த மேலே குறிப்பிட்டுள்ள நம்பர் கொண்ட அரசு பேருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு  சந்தைப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தது தற்பொழுது தான் அந்த சந்தப்பேட்டை பஸ் நிலைய பஸ் ஸ்டாப்புக்கு பஸ் வருவதில்லை என்பது மக்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர் இது மேலே குறிப்பிட்டுள்ள 70,98 அரசு பேருந்து தொளசம்பட்டி சந்தை பஸ் ஸ்டாப்புக்கு பஸ் வந்தால் மக்களுக்கு மிகவும் ஏதுவாக இருக்கும் ஏதுவாக என்பதை ஊர் பொதுமக்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்..



No comments:

Post a Comment

Post Top Ad