சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புதியதாக சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமி சிலையை ஒரு மாதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. புனித தீர்த்தங்களை மேட்டூரில் இருந்து கொண்டுவரப்பட்டது.
1008 தீர்த்த குடம் எடுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் திரளான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். புனித தீர்த்தங்களை கணபதி ஹோமத்தில் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.அதன் பின்னர் நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெறும் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தங்கள் வழங்கப்படும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களுக்கு சிறப்பு மண்டல பூஜை நடைபெறும். சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தினம்தோறும் சிறப்பான அலங்காரம் நடைபெறும்.இதில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment