சேலம் மாவட்டம் தொளசம்பட்டி எஸ்பிஐ ஏடிஎம் அருகில் உள்ள லேட்.பெரியம்மாள் W/O சுப்பிரமணி அவர்களின் நிலம் பொது சொத்தாக உள்ளது.இதை இவரின் மகனான மாதேஸ்வரன் மட்டும் ஆக்கிரமித்துக் கொண்டார்.வாரிசுகளான கிருஷ்ணவேணி,முத்துலட்சுமி,கோமதி, வெங்கடாசலம் ஆகிய நான்கு வாரிசுகளையும் ஏமாற்றி மாதேஸ்வரன் தனிப்பட்ட முறையில் ஆக்கிரமித்து வீட்டு வரி ரசீது,குடிநீர் ரசீது,மின் இணைப்பு ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மாதேஸ்வரன் பெயரில் பெற்றுக்கொண்டு,சொத்த அனைத்தும் எனக்கு என்று கூறி அனைத்து வாரிசுகளையும் ஏமாற்றும் விதத்தில் மிரட்டுகிறார்.
இது சம்பந்தமாக தகவல் தெரிந்து நான்கு வாரிசுகளும் தமிழ்நாடு மின் வாரியத்துறை உதவி பொறியாளர் அவர்களுக்கும்,ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும்,கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் உடனடியாக இந்த ரசீதுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கடிதத்தை கொடுத்தனர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். முழுமையாக விசாரிக்காமல் போலியாக ஆதாரங்களை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரத்து செய்யப்படுமா என்று ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள்..
No comments:
Post a Comment