சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பொது ஏலம் வியாழக்கிழமை 27 ஆம் தேதி என்று விடப்படுகிறது. இதில் கற்பூர கடை,வாகன பாதுகாப்பு உரிமம், நவீன கட்டண கழிப்பிடம் ,தெப்பக்குளம் மீன் பிடித்தல் ,தென்னை மரம் மேல்மகசூல் உரிமம் ,புளியமரம் மேல் மகசூல் உரிமம் உள்ளிட்ட ஏலங்கள் விடப்படுகிறது காலம் காலமாக டெண்டர் மிக நேர்மையான முறையில் எந்த ஒரு செல்வாக்குமின்றி அலுவலர்களில் முன்னிலையில் யார் அதிகம் ஏலம் கேட்கிறார்களோ அவருக்கே கோவில் நிர்வாகத்தின் சார்பில் அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும்.
அதேபோன்று இந்த முறை நடைபெறுகின்ற ஏலத்திலும் மிக நேர்மையான முறையில் யார் அதிகம் ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு ஏலம் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ஏலத்திற்கு டெபாசிட் கட்டியுள்ளார்கள் கேட்டுக்கொள்கிறார்கள்..
No comments:
Post a Comment