சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 18 September 2024

சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு



  சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை செல்வதற்கு பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பத்தர்கள் நலன் கருதி கூட்ட நெரிசல் இல்லாமல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க சேலம் நிர்வாக இயக்குனர் கே. இளங்கோவன் உத்தரவு படி சேலம் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் கூட்டாண்மை வணிக மேலாளர் கலைவாணன். வணிக மேலாளர் கணேஷ் குமார் பஸ் நிலைய மேலாளர் பாண்டியன் ஆகியோரின்  முயற்சியில் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டன. 



அதனையடுத்து,வ சேலம் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் முகாமிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் பயணிகள் சிறப்பான பயணம் செய்ய ஏற்பாடு செய்த சேலம் நிர்வாக இயக்குனர் கே. இளங்கோவன். சேலம் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பயணிகள் பாராட்டி சென்றனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad