இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2024 அன்று நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2024 அன்று நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல்.



சேலம் மாவட்ட இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2024 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளதாவது:


சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Micro Level Private Job Fair) நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம். ஜவுளி, வங்கி சேவைகள். காப்பீடு, மருத்துவம். கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.


சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர். ஆசிரியர். தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


எனவே, பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.01.2025 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

Post Top Ad