கபீர் புரஸ்கார் விருது" பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

கபீர் புரஸ்கார் விருது" பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



"கபீர் புரஸ்கார் விருது" பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: டாக்டர் இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான "கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும். குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப்பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் தகுதியுடையவராவர். பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப்பெற


இவ்விருதானது. ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி. இன. வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக்கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.


2025ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத கண்டிப்பாக நிராகரிக்கப்படும்..

No comments:

Post a Comment

Post Top Ad