ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.111.58 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகள் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 December 2024

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.111.58 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகள்


வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.111.58 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப, அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தகவல்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள்  (31.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது


பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கலைஞர் கனவு இல்லம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம். கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டம். பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.111.58 கோடி மதிப்பீட்டிலான 3,488 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,132 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,356 பணிகள் நடைபெற்று வருகின்றன.


அந்தவகையில், இன்றையதினம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சிங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய குளம் அமைக்கப்பட்டுள்ளதையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சிங்கிபுரம், விளாரிபாளையம் குறிச்சி மற்றும் புழுதிக்குட்டை ஊராட்சிகளில் ரூ.52.50 இலட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவது நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதனைத்தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் விளாரிபாளையம் ஊராட்சி, மொட்டூர் குடியிருப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், விளாரிபாளையம், புழுதிக்குட்டை ஊராட்சிகளில் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.450 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அதேபோன்று, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புழுதிக்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3280 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடப் பணிகளும் என மொத்தம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 21 வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப,அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad