தாரமங்கல கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 December 2024

தாரமங்கல கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷம்



சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஆலயத்தில்  இந்த ஆண்டின் இறுதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு விமர்சையாக அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் கொண்டு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் நந்தி பகவானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம்சிவாய போற்றி ஓம்சிவாய போற்றி என சிவ மந்திரங்களை முழங்கி நந்தி பகவானை தரிசனம் செய்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad